Site Map

தனிப்பட்டவை

Business

You are here

தரவு சேவைவழங்கல்

all you want

ஸ்ரீலரெ இன் அதிநவீன தரவு நிலையம் வழங்கும் சேவைகள்; உங்கள் தினசரி தொழில்நுட்ப பிரச்சனைகளைக் குறைத்து, உங்கள் வணிக எல்லைகளை விரிவாக்க உதவுவதன் மூலம் உங்கள் நிறுவனமானது தனது மைய வணிகத்தின் திட்ட வழிகாட்டல்களில் கவனஞ்செலுத்த உதவுகிறது.

எமது முழுமையான தரவு நிலைய சேவைகள் அதன் சிறந்த உற்பத்திப்பட்டியல்கள் மூலம், உங்கள் முக்கியமான உட்கட்டமைப்பினையும் செயலிகளையும் நிர்வாகப்படுத்துகிறது. நாம் உங்கள் வணிகத்தின் திடநிலையைப் பலப்படுத்த உதவும் அதேநேரம், தொழிற்றிறனுடனான ஆதரவுடன் நம்பிக்கைத்தன்மை, பாதுகாப்பு மற்றும் விரிவாக்கத்திறனையும் அளிக்கிறோம்.

ஸ்ரீலரெவின் தகவல் தரவு நிலையத்தின் மூலமாக உங்கள் வணிகத்தை முழுமையானதொரு தகவல் தொழில்நுட்ப சூழலைக்கொண்டதாக விரிவாக்குங்கள்.

நன்மைகள்
ஆகாச கணிணி முகில் சேவை

பல்வேறு விதமான தகவல் தொழில்நுட்பம் சம்பந்தப்பட்ட சேவைகளின் பெறுவழித் தேவைகள் கூட்டாண்மை வணிகங்களுக்கு அவசியமாகி வருகின்றன. எனவே இன்றைய காலகட்டங்களில் எமது வணிகங்களை நடத்துவதற்கான உள்ளிருப்பு பொறிமுறைக்குப் பெரும்பாலும் கணிணிமுகில் மேடையில் தங்கியிருக்கிறார்கள். தரவு மற்றும் தகவல் பாதுகாப்பு தொடர்பிலுள்ள நிச்சயமற்றதன்மையைப் பொறுத்தமட்டில் இந்த மாற்றமானது இலங்கையில் மெதுவாகவே இருக்கின்றது. இப்பின்னணியில் ஸ்ரீலங்கா ரெலிகொம்மின் தேசிய கணிணிமுகில் மேடையான ஆகாஸ வழங்கப்படுகிறது. உண்ணாட்டு கூட்டாண்மை நிறுவனங்கள் தற்போது பங்கிடப்பட்ட அமைவடிவாக்கம் செய்யப்பட்ட கணிணி வளங்களை நாட்டில் வழங்கப்படும் இணைய வழங்கிகள் மூலமாகப் பயன்படுத்தி அதன் பாவனைக்கான கட்டணங்களையும் செலுத்துகின்றனர். இப்பெருமுயற்சியானது இரகசிய தகவல்களைப் பாதுகாக்கும் அவசியத்தேவைகளுக்கான தீர்வை வழங்கியுள்ளது.

ஆகாஸ தொழில்நுட்பமானது Iaas, PaaS, DaaS, SaaS, CaaS உட்பட, தனது அனைத்து கணிணிமுகில் சேவைகளையும் கூட்டாண்மை வணிகங்களில் வணிக முகாமைத்துவ மேடையுடன் ஒன்றிணைக்கிறது. உட்கட்டுமானத்திலிருந்து மென்பொருள் வரையிலான சேவைகளை மத்தியப்படுத்தப்பட்ட பாவனையாளர் முகாமைத்துவத்தினால் அணுகமுடியும். இதனால் பாவனையாளருக்கான தொழில்நுட்ப ஆதரவுக்காக இன்னொருவர் தலையிடவேண்டிய தேவையில்லாமல் போகிறது. இதன் விழைவு என்ன? அவசியமான தரவு மற்றும் தகவல்களை செலவுப்பயனுறுதியுடன் பாதுகாக்கலாம். சரிப்படுத்தலை குறைந்த நேரத்தில் தீர்க்கலாம், த.தொ சம்பந்தமான பிரச்சனைகளைத் தீர்ப்பதில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம், அவற்றில் வேகம், மொத்தத்தில் உள்ளக வினைத்திறங்களில் மேம்பாடு.

 

ஆகாஸ உற்பத்திப்பொருட்கள்

கணிணிமுகில் வழங்கி (IaaS)

 

கூட்டாண்மை நிறுவனங்கள் முகங்கொடுக்கும் அதிகரித்த த.தொ உட்கட்டுமானம் மற்றும் பராமரிப்புச் செலவுகளுக்கான தீர்வுகளை ஆகாஸ வழங்குகிறது. அடிப்படைச் சேவையான IaaS அல்லது உட்கட்டுமானச் சேவையானது அதன் பாரம்பரிய CAPEX மாதிரியிலிருந்து, மெய் நிகர் உட்கட்டுமானம் அல்லது வன்பொருளிலான முதலீடாக மாற்றப்பட்டுள்ளது.

ஆகாஸ பொது கணிணிமுகிலானது உங்கள் வணிக செயலிகளதும் கூட்டாண்மை இணையதளங்களின் முக்கிய வேலைப்பழுக்கான முழுமையான உட்கட்டுமான செயலாற்றல்களை வழங்குகிறது. அத்துடன், நீங்கள் உங்கள் சேவைகளை சக்திவாய்ந்த அத்துடன், நீங்கள் உங்கள் சேவைகளை சக்திவாய்ந்த API கள் மற்றும் பாவனையாளருக்கேற்ற web interface portal மூலமாக நிர்வகிப்பதற்கு ஏற்பாடு செய்கிறோம். ஆகாஸ வழங்கும் virtual server space, network connections, bandwidth, IP addresses and load balancers போன்றவற்றைப் பராமரிக்கும் பொறுப்பு கணிணிமுகில் சேவையை வழங்குவோருக்குரியது.

 

Platform as a Service(PaaS)

 

இன்றைய வணிகச்சூழலில் செயலிகளை ஈடுபடுத்தும் சிக்கலான பணியை ஆகாஸ கணிணிமுகில் மேடை இலகுவாக்குகிறது. வன்பொருள், தரவுத்தளம் மற்றும் செயலி சேவைகளை கொள்வனவு செய்தல், நிறுவுதல் மற்றும் அமைவடிவாக்கம் செய்தலுக்கான தேவையானது மேலதிகமான நேரத்தையும் பணத்தையும் கூட்டாண்மை மூலவளங்களையும் எடுக்கிறது. PaaS அல்லது Platform as a Service ஆனது புதிய செயலிகளை விரைவாக ஈடுபடுத்தலுக்கான தீர்வாகும். முன்னணி கணிணிமுகில் மேடை வழங்குனரான Cumulogic உடன் இணைந்து, ஆகாஸவின் தொழில்நுட்பமானது, உருவாக்குவதற்கும் செயலிகளை நிர்வகிப்பதற்கும் இலகுவாக்குகிறது. அதேநேரத்தில் வினைத்திறனை அதிகரித்து, உரிய நேரத்தில் சந்தைப்படுத்தி குறைந்த செலவில் நிர்வகிக்கிறது.

Desktop as a Service(DaaS)

 

மேசைத்தளத்தின் (desktop) தோற்றமானது குறிப்பிட்டளவில் மாறிவருகிறது. முன்னர் எப்போதும் விட இறுதிப்பயனாளர்கள் தூர இடங்களிலிருந்து, வீடுகளிலிருந்து, பயணம் செய்யும்போது, கிளை நிறுவனங்களிலிருந்து பல்வேறு உபகரணங்கள் மூலம் தமது கூட்டாண்மை வளங்களைப் பயன்படுத்திவருகிறார்கள். அதேநேரத்தில், பாதுகாப்பை மீறாது செல்லின கருவிகளைப் பயன்படுத்தும் ஊழியர்படைக்கான பெறுவழியை வழங்குவதில் த.தொ கடும் அழுத்தத்திலுள்ளது. இறுதிப்பயனாளர்களின் கருவிகளுக்கான செலவுகளைக் கட்டுப்படுத்துவதுடன், கூட்டாண்மை தரவுகள் மற்றும் செயலிகள் பாதுகாப்பாக இருப்பதையும் த.தொ உறுதிப்படுத்தவேண்டும்.

AKAZA DaaS வணிக நிறுவனங்களுக்கு இலகுவானது. கணிணிகளை வாங்குதல், பழுதுபார்த்தல், புதுப்பித்தல் போன்ற தொல்லைகளின்றி, எந்தவித கட்டுப்பாடுகளுமின்றி, எங்கிருந்தும், எந்த நேரத்திலும், எந்த கருவியிலிருந்தும், ஒரு நிலையான மாதாந்தக் கட்டணம் மூலம் ‘மெய் நிகர்’ வெளியிடத்தை அணுகலாம்.


Software as a Service (SaaS)

 

மென்பொருள் வழங்கும் பொறிமுறை என்றவகையில் Software as a Service (SaaS) இன் முக்கியத்துவமானது, அவை மென்பொருள் செயலிகளை ஈடுபடுத்தும் வணிகவிற்பனையில் கவனஞ்செலுத்துவதிலிருந்து விலகி பதிலுகு செயலிகள் வழங்கும் சேவைகளை நிர்வகிக்கின்றன. . Deploying complex enterprise software such as ERP and CRM செயலிகள் போன்ற வணிகமுயற்சி மென்பொருட்களை ஈடுபடுத்தலில் பௌதிக உட்கட்டுமானம், அனுமதிப்பத்திர செலவுகள் மற்றும் ஏற்கனவேயுள்ள முறைமைகள், தரவுகளை ஒருங்கிணைக்கும் பாரிய தொழினுட்பவியலாளர்கள் குழு போன்றவற்றுக்காக குறிப்பிடத்தக்க முதலீடு தேவைப்படுகிறது. இது நிதிவளங்களை எடுப்பதுடன் மற்றும் பெறுமதியற்ற செயற்பாடுகளில் நேரத்தை செலவிடுவதற்கும் காரணமாகிறது.

பிற Akaza SaaS உற்பத்திப்பொருட்கள்

eLearning

பயிற்சிகளின்போது பயன்படுத்தப்படும் e-கற்கைநெறி பிரபலமடைதல் மற்றும் கணிணிமுகிலை அடிப்படையாகக்கொண்ட கற்கை நிர்வாக முறைமையின் நன்மைகள் போன்றவை, நெகிழ்வுத்தன்மை கொண்டதும் செலவுப்பயனுறுதியுள்ளதுமான பயிற்சி முறைகளை வழங்குவதற்கான நிறுவனங்களின் தேவைகளை நிறைவேற்றியுள்ளன. ‘ஆகாஸ’ e-கற்கை முறையானது, வணிகமுயற்சி மற்றும் கல்விசம்பந்தமான மேடையில் உருவாக்கப்பட்டு, ‘ஆகாஸ’ மூலம் இணையத்தில் கிடைக்கிறது. இது, பயிற்சியின் ஆரம்பம் முதல் முடிவு வரையான பதிவுசெய்தலிலிருந்து, சான்றிதழ் வழங்குதல் வரையான செயற்பாடுகளை சுருக்கமாகத்தருகிறது.

மைக்ரோசொஃப்ட் உற்பத்திப்பொருட்கள்

மைக்ரோசொஃப்ட் உடன் இணைந்து தற்போது ஸ்ரீலரெ, தனது வாடிக்கையாளருக்கான மைக்ரோசொஃப்ட் மென்பொருள் சேவைகளையும் செயலிகளையும் வழங்குவதற்காக மாதாந்த அடிப்படையில் மைக்ரோசொஃப்ட் பொருட்களுக்கான அனுமதிப்பத்திரங்களைப் பெறுகிறது. மைக்ரோசொஃப்டின் ஆகாஸ, தனிப்பயனாக்கப்பட்டதும் விரைவானதுமான தீர்வுகளை பரந்த அளவிலான வாடிக்கையாளர்களுக்கு வழங்குவதற்காக பல்வேறுவகையான சேவைகளுக்கு ஆதரவாகவுள்ளது.

Oracle BPS

ஒரு மின்னியலாக்கப்பட்டதும் உலகளாவியதுமான சூழலிலுள்ள கூட்டாண்மை வணிக நிறுவனங்களின் தொழிற்பாடுகளுக்கு மென்பொருள் செயலிகள் அத்தியாவசியமானவை. தொடர்புசால் தரவுத்தள பொருட்களைக் கொண்டுள்ள Oracle செயலிகள், மென்பொருட்களை வழங்கி நவீன வணிகங்களுக்கு வலுவூட்டுகின்றன. ஸ்ரீலங்கா ரெலிகொம் (ஸ்ரீலரெ), Oracle உடன் இணைந்து, இலங்கை சந்தையிலும் தெற்காசிய பிராந்தியத்திலுமுள்ள பெரிய மற்றும் நடுத்தர வணிகங்களுக்கான வணிகச்செயற்பாட்டு சேவைகளை வழங்குகிறது. இச்சேவையானது, மனிதவளங்கள், நிதி மற்றும் கணக்கியல் போன்றவை சம்பந்தமான பொறுப்புக்கள் மற்றும் தொழிற்பாடுகளைப் புறச்செய்வித்தல் மற்றும் ஆய்வுகள், உற்பத்தி, விற்பனை, குத்தகை, வழங்கல் தொழிற்றுறைப் பிரிவுகளிடையே கம்பனிக்கான ஆய்வு மற்றும் அறிவித்தல்கள் போன்றவற்றின் பங்கு போன்றவற்றைக் கொண்ட்து.

Communications as a Service (CaaS)

 

NVISION

NVISION என்பது, ரௌட்டர்கள், வலையமைப்பு அலகுகள் போன்ற இறுதிப்பயனாளர்களின் கருவிகளை கண்காணிப்பதற்கான முழுமையானதும் நெகிழ்வுத்தன்மையுடையதுமான தீர்வாகும். Simple Network Management Protocol (SNMP) ஐ பயன்படுத்தி ஒரு துறையின் நிலைப்பாடு பற்றிய தகவல்கள், இணைக்கப்பட்ட கருவிகள் மற்றும் வலையமைப்பு போக்குவரத்து போன்றவை சேகரிக்கப்படுகிறது. நீங்கள் அணுகவிரும்பும் இணைய தளத்தில் இணைப்பு பிரச்சனைகளுக்கு காரணம் தொடர்பாடல் சேவை வழங்குனரா என்று தீர்மானிப்பதற்கு N-Vision உதவுகிறது. அதன்பின்னர் இறுதி கருவியின் தன்மையையும் வலையமைப்பு செயற்பாட்டையும் குறிப்பாக கண்டுபிடிக்கிறது.

பல்லூடக தொடர்பு நிலைய சேவை வழங்கல்

 

ஸ்ரீலரெ இன் பல்லூடக தொடர்பு நிலைய சேவை வழங்கலானது ஒன்றில் எல்லாம் கிடைக்கும் வசதியைக்கொண்டது. Queuing, Menu selection, Message Taking போன்ற தெரிவுகளுக்காக ஒருங்கிணக்கப்பட்ட IVR நன்மைகளுடன் பல்லூடக திறன் அடிப்படையிலான routing and external destinations வழங்குகிறது. இந்த அம்சங்களை விரும்பும் வாடிக்கையாளர்களுக்கு வெளிப்புற அழைப்புகளை ஏற்படுத்திக்கொடுக்கிறது. மேலும், பல இடங்களிலிருந்து சிறந்த, ஒருங்கிணைந்த தொடர்பாடல் அம்சங்களை ஆதரிக்கிறது. இத்தீர்வானது; வணிகமுயற்சி மட்டத்திலான தொடர்பு நிலைய சேவைகள், வணிக செயன்முறை சேவைகள் மற்றும் நவீன தொடர்பு நிலைய பயிற்சிக்கான வசதிகளை வளப்படுத்துகிறது.

Web Security as a Service (WebSecaaS)

 

Web Security as a Service (WebSecaaS) என்பது கணிணிமுகில் அடிப்படையிலான ஒரு பாதுகாப்புத் தீர்வாகும். இது, இறுதிப்பயனாளர்கள் தமது தொழில்தருனர்கள் மற்றும் சேவை வழங்குனர்களால் உருவாக்கப்பட்ட கொள்கைகள் மற்றும் விதிகளின்படி இணையத்தைப் பயன்படுத்துகிறார்களா என இணையப்போக்குவரத்தைக் கண்காணிக்கும்.

WebSecaaS uses a proven Security-as-a Service (SaaS) பயன்படுத்தும் மாதிரியுரு, அமைப்பதற்கும் நிர்வகிப்பதற்கும் இலகுவாகவும் கம்பனிகள் ஒரு செல்லின வேலைப்படையை ஆதரிப்பதற்கும் வகைசெய்கிறது.

பங்கிட்ட சேவை வழங்கல்

 

பெரும்பாலான வணிக நிறுவனங்கள் இணைய தளங்களையும் வலைவாசல்களையும் பயன்படுத்தி தமது வாடிக்கையாளர்களுடன் தொடர்பு கொள்வதுடன், புதிய வாடிக்கையாளர்களையும் பெற்றுக்கொள்கின்றன. இணைய உள்ளடக்கங்களால் நன்மைகளைப் பெறமுடியுமானாலும் பொருத்தமான இணைய சேவை வழங்குனரைத் தெரிவுசெய்வது மிகவும் முக்கியமாகும். வருமானம், இலாபத்தை அதிகரித்தல் போன்றவற்றுடன் தேடல் பொறிமுறையின் தரத்தை விரும்பத்தக்கதாக ஆக்குதல் மூலமாக வாடிக்கையாளருக்கு இணைய வணிகம் இலகுவாகும். வணிக இணைய தளங்களை ஆபத்தான தாக்குதல்களிடமிருந்து தடுப்பதும் அவசியமாகும்.

ஸ்ரீலரெ இன் தனிப்பட்ட இணைய தொகுதிச்சேவை தீர்வு மற்றும் நவீன தரவு நிலையம் மூலமாக, வணிக நிறுவனங்கள் குறைந்த ஆரம்ப செலவிலும் அதிசிறந்த தொழினுட்ப ஆதரவிலும் தமது சொந்த இணைய தளத்தை ஆரம்பிக்க முடியும். பரந்த அளவில் பயன்படுத்தப்படுவதும் அதிசிறந்த இணைய சேவைவழங்கும் தன்னியக்க செயற்றிட்டமுமான Plesk 12 ஆனது Windows இலும் Red Hat இலும் ஈடுபடுத்தப்படுகிறது.

Storage as a Service (STaaS)

 

மின்னஞ்சல்கள், சொற்செயலி ஆவணங்கள், காணொளிகள், படங்கள், ஒலி கோப்புகள், இணைய பக்கங்கள் போன்றவற்றையும் பிற வணிக ஆவணங்களையும் சூழ்ந்துகொள்ளும் கட்டமைப்பற்ற தரவுகளின் வளர்ச்சியானது முன்னெப்போதுமில்லாமல் அதிகரித்துவருகிறது. இது, பெரும் ஊடகங்கள், செல்லின கருவிகளின் பெருக்கம் மற்றும் இலத்திரனியல் மயப்படுத்தப்படும் உள்ளடக்கங்கள் போன்றவற்றினால் சேரப்பட்டுள்ளது. தற்போதைய NAS/SAN உட்கட்டமைப்புகள், backup மற்றும் சீரமைப்புகளுக்கு தாக்குப்பிடிக்கமுடியாமையினால், ஒரு வணிக நிறுவனத்தின் நேரத்தை வீணடிக்கிறது.

இவையெல்லாமே செலவு அதிகரிப்புக்கு காரணமாகின்றன. பெரும்பாலான கூட்டாண்மை நிறுவனங்கள் ஒரே அளவில் சேமகத்திற்கான வரவுசெலவு வீழ்ச்சியை முகங்கொடுக்கின்றன. மட்டுப்படுத்தப்பட்ட மூலவளங்களுடன் அதிகரித்துவரும் சேமகங்களை நிர்வகிக்கவேண்டியுள்ளன. தரவுப்பெருக்கத்தைக் கட்டுப்படுத்த சேமக உட்கட்டுமானத்தில் திடீர் மாற்றம் தேவை என்பதை ஸ்ரீலரெ புரிந்துள்ளது. அதன்படி, Cloudian, ஸ்ரீலரெ இன் தேசிய கணிணிமுகில் மேடையான Akaza உடன் இணைந்து, சக்திவாய்ந்ததும் செலவுப்பயனுறுதி கொண்டதுமான சேமக தீர்வொன்றினை வழங்குகிறது. Cloudian ஐப் பயன்படுத்துவதன் மூலம், ஒரு வணிக நிறுவனத்தின் தரவுச்சேமிப்பு, இடர்வரவு மீட்பு போன்றவற்றுக்குப் பலமான பாதுகாப்பை வழங்கமுடியும் என்பதுடன், மொத்தத்தில் சேமக செலவும் குறையும்.

Scroll To Top