ஸ்ரீலரெ இன் அதிநவீன தரவு நிலையம் வழங்கும் சேவைகள்; உங்கள் தினசரி தொழில்நுட்ப பிரச்சனைகளைக் குறைத்து, உங்கள் வணிக எல்லைகளை விரிவாக்க உதவுவதன் மூலம் உங்கள் நிறுவனமானது தனது மைய வணிகத்தின் திட்ட வழிகாட்டல்களில் கவனஞ்செலுத்த உதவுகிறது.
எமது முழுமையான தரவு நிலைய சேவைகள் அதன் சிறந்த உற்பத்திப்பட்டியல்கள் மூலம், உங்கள் முக்கியமான உட்கட்டமைப்பினையும் செயலிகளையும் நிர்வாகப்படுத்துகிறது. நாம் உங்கள் வணிகத்தின் திடநிலையைப் பலப்படுத்த உதவும் அதேநேரம், தொழிற்றிறனுடனான ஆதரவுடன் நம்பிக்கைத்தன்மை, பாதுகாப்பு மற்றும் விரிவாக்கத்திறனையும் அளிக்கிறோம்.
SLT iDC மூலமாக உங்கள் வணிகத்தை முழுமையானதொரு தகவல் தொழில்நுட்ப சூழலைக்கொண்டதாக விரிவாக்குங்கள்.
உங்களால் கட்டுப்படுத்தக்கூடிய பாரம்பரிய பங்கீட்டு சேவைவழங்கல் தீர்வின் எளிமை மற்றும் வாங்கும்திறன் போன்றவற்றுடன் ஒப்பிடத்தக்க தனிப்பயனுள்ள வழங்கியை நீங்கள் விரும்பினால், ஸ்ரீலரெயின் மெய் நிகர் தனிப்பயன் வழங்கியே (Virtual Private Server (VPS) உங்களுக்கான சிறந்த தீர்வாகும். இதில் தொழிற்பாட்டு முறைமை, பாதுகாப்பு, தரவு அனுப்பீடு, தரவுக்காப்பு மற்றும் தரவுசேமிப்பு போன்ற சேவைவழங்கல் சூழலின் சக்திவாய்ந்த அம்சங்கள் எல்லாம் ஒன்றுசேர்ந்துள்ளன.
மெய் நிகர் தனிப்பயன் வழங்கி (Virtual Private Server (VPS) மூலம் நாம் உங்களுக்கு ஆதிக்கமுள்ள, நம்பிக்கையான, தொழில்ரீதியாக நிர்வகிக்கக்கூடிய வழங்கியை அளித்து, நீங்கள் வன்பொருள், மென்பொருளை நிர்வகிக்கும் சுமையை குறைக்கிறோம். மேலும், மனித வலுவுக்காக செலவிடத்தேவையில்லை. செலவுகுறைந்த ஆனால் தொழில்நுட்பத்தில் சிறப்பான கணிணி மூலவளங்கள் உங்களுக்குத் தேவையெனில், VPS உங்களுக்கேற்ற தெரிவாக இருக்கும். முக்கிய செயலிகளுக்கான உயர் பாவனையை உறுதி செய்வதற்காக சேவை கிடைக்கக்கூடிய தன்மையை VPS கொண்டிருக்கிறது. அத்துடன் நாம் காலத்துக்குக் காலம் தேவைப்படும் மூலவளங்களை அதிகரித்து, பாவனையாளர்கள் தமக்கான திட்டங்களை மாற்றுவதற்கேற்ற நெகிழ்வுத்தன்மையையும் வழங்குகின்றோம்.