- போர்வீரர்களின் கனவுகளை நனவாக்கும் ஸ்ரீலரெ.

 

தேசிய தகவல் தொடர்பு தொழினுட்ப தீர்வுகள் வழங்குனரான ஸ்ரீலங்கா ரெலிகொம் (ஸ்ரீலரெ), நாட்டுக்காக தம்மை அர்ப்பணித்த போர் வீரர்களுக்காகவென அரசாங்கம் ஏற்படுத்தியிருக்கும் ‘விருசர வரப்பிரசாத’ (வீரர்களுக்கான நன்மைகள்) என்ற முயற்சியில் தன்னையும் இணைத்திருக்கின்றது என்பதை ஸ்ரீலரெ தலைமை அலுவலகத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட ஒரு ஊடக மாநாட்டில் அறிவித்துள்ளது.

இந்த நாட்டையும் அதன் மக்களையும் பாதுகாக்கவென தமது வாழ்க்கையை அர்ப்பணித்து, ஊனமடைந்த, இளைப்பாறிய இராணுவம், விமானப்படை மற்றும் கடற்படை, பொலிஸ் மற்றும் குடிமக்கள் பாதுகாப்பு படையினரின் உதவிக்காக ‘விருசர வரப்பிரசாத’ (விருசர தனிச்சலுகை அட்டை) பாதுகாப்பு அமைச்சரினால் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த தனிப்பட்ட சலுகை வழங்கும் அட்டையானது, போர்வீரர்களின் நெருங்கிய உறவினர்களுக்கும் பயன்படும். இந்த அட்டை மூலம் அவர்கள் மருத்துவ சிகிச்சை, போக்குவரத்து, வங்கி, நிதி, தொலைத்தொடர்பாடல் மற்று தகவல்தொடர்புதொழினுட்பம் போன்ற தேவைகளைப் பூர்த்திசெய்துகொள்வதுடன், பிற உற்பத்திகள் மற்றும் சேவைகளையும் இலகுவாக பெற்றுக்கொள்ளலாம்.

தேசிய கூட்டாண்மை நிறுவனமான ஸ்ரீலரெ, அரசாங்கத்தின் இந்த ‘விருசர வரப்பிரசாத’ திட்டத்திற்கு உதவுவதற்கு முன்வந்து, பங்களிப்பும் செய்துள்ளது. இச்செயற்றிட்டத்தின் மூலமாக, ஸ்ரீலரெ போர்வீரர்களுக்கு முன்னெப்போதுமில்லாத வாய்ப்புக்களை வழங்கவுள்ளது. அவர்கள் நவீன தகவல்தொடர்புதொழினுட்ப சேவைகளுடன், கவர்ச்சிகரமான விலைக்கழிவுகளையும் பெறவுள்ளார்கள். ஸ்ரீலரெ வழங்கும் பொதிகளில் விருசர தனிச்சலுகை வாடிக்கையாளர்கள் பின்வரும் நன்மைகளைப் பெறவுள்ளார்கள்:

மெகாலைன் புதிய இணைப்புக்கள்

ஸ்ரீலரெ இன் மெகாலைன் குரல்வழி இணைப்பு கட்டணத்தில் 80% இற்கும் அதிகமான விலைக்கழிவு, மெகாலைன் டபிள் பிளே (அகலப்பட்டை) இணைப்புக்கட்டணத்தில் 60% விலைக்கழிவு மற்றும் இலவச Wi-Fi ரௌட்டர், மெகாலைன் டபிள் பிளே (பியோ டிவி) இணைப்புக்கட்டணத்தில் 40% விலைக்கழிவு மற்றும் இலவச ‘செட் அப் பொக்ஸ்’ மற்றும் மெகாலைன் ட்ரிப்பிள் பிளே வாடிக்கையாளர்களுக்கான இணைப்புக் கட்டணத்தில் 50% கழிவுடன் இலவச ‘செட் அப் பொக்ஸ்’ உம் வழங்கப்படவுள்ளன. இந்த விருசர வரப்பிரசாத திட்டத்தின் கீழ் சகல போர்வீரர்களுக்கும் அவர்தம் குடும்பங்களுக்குமான சகல அழைப்புக்களும் அடிநிலை விலையிலேயே அறவிடப்படும்.

பொதி தரமுயர்த்தல்

தமது பொதிகளை டபிள் பிளே (அகலப்பட்டை அல்லது பியோ டிவி) அல்லது ட்ரிப்பிள் பிளே பொதிகளுக்கு தரமுயர்த்தவிரும்பும் வாடிக்கையாளர்களுக்கு ஆரம்பக் கட்டணமும் தேவையான வதிவிட உபகரணங்களும் இலவசமாக வழங்குவதற்கு ஸ்ரீலரெ தீர்மானித்துள்ளது.

சிறப்பு பியோ டிவி ‘விருசர வரப்பிரசாத’ பொதி

மேலும் இந்த அட்டையை வைத்திருப்போர், 42 சனல்கள் அடங்கிய ‘விருசர வரப்பிரசாத’ பியோ டிவி பொதிக்கு உரித்துள்ளவர்கள். இதன் மாத வாடகை ரூ.550 மட்டுமே என்பதுடன், ஆரம்பக்கட்டணம் இலவசம். ரௌட்டர் மற்றும் செட்டொப் பொக்ஸும் இலவசம்.

சிட்டிலிங் சி.டி.எம்.

புதிய சிட்டிலிங் இணைப்புக்களுக்கான ஆரம்பக்கட்டணம் 50% கழிவுடன் வழங்கப்படுவதுடன், வாடிக்கையாளர் இலவச கொடுப்பனவுத் திட்டத்தின் கீழ் புதிய சி.டி.எம்.ஏ கருவியையும் வாங்குவதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதற்கான அழைப்புக்கட்டணங்கள் அடிநிலை விலையிலேயே அறவிடப்படும்.

சிசுகனெக்ட் அல்லது மாணவர்கனெக்ட்

இது பெற்றோர் தமது பிள்ளைகள் எங்கிருந்தாலும் காசு இன்றி தொடர்பு கொள்வதற்கு வகை செய்யும் ஒரு வசதியாகும். இந்த விருசர வரப்பிரசாத திட்டத்தின் கீழ், போர்வீரர்களும் அவர்களது குடும்பத்தினரும் இந்த பொதியை இலவச மாதவாடகையுடன் பெற்றுக்கொள்ளலாம். இதற்கான அழைப்புகள் நியம விலைகளில் அறவிடப்படும்.

தேசிய ததொதொ தீர்வுகள் வழங்குனர் என்ற வகையில், ஸ்ரீலரெ இந்தக் கடமையைப் பூர்த்திசெய்யவேண்டியது தனது பொறுப்பு என கருதுகிறது. இந்த போர்வீரர்களும் அவர்தம் குடும்பத்தினரும் நாட்டுக்காக பெரும் தியாகத்தை செய்திருக்கிறார்கள். அவர்களது உயிரிழப்பு, ஊனம், குடும்பத்தினரின் இழப்பு போன்றவை மீளளிக்கப்படமுடியாதவையாகும். எம்மால் முடிந்தளவு அவர்களது கனவுகளை நனவாக்கி, அவர்களது எதிர்காலத்தில் பெறவேண்டியவற்றுக்கு உதவவேண்டும் என ஸ்ரீலரெ முனைகிறது.

ஸ்ரீலரெ இன் விருசர வரப்பிரசாத, மார்ச் 28, 2016 இல் ஆரம்பமாகும். ஆர்வமுள்ளோர், ஸ்ரீலரெ இன் 24 மணிநேர துரித அழைப்பான 1212 இல் தொடர்புகொண்டு இதுபற்றிய விபரங்களை அறிந்துகொள்ளலாம்.

 
--> Scroll To Top