இலங்கையின் முதலாவது வகையான இயங்குதளத்தின் மூலமாக ‘SLT Filmhall’ என்னும் தொடரியக்க திரைப்பட வசதி அறிமுகம் செய்துவைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் வாடிக்கையாளர்கள் உயர்தரமான காணொளி தொடரியக்கங்களையும் இசை மற்றும் கணிணி விளையாட்டுக்களையும் தரவிறக்கம் செய்துகொள்ளலாம். இது திரைப்படம் பார்க்கும் அனுபவத்தை வீட்டிலேயே வழங்குகிறது. முன்னெப்போதுமில்லாத வகையில் இலங்கையில் தற்போது கிடைக்கக்கூடிய இந்த சேவையை ஒரு தனித்த இணைய வலைவாசலான, https://sltfilmhall.slt.lkமூலம் பெற்றுக்கொள்ளமுடியும்.