ஸ்ரீலரெ சிசு (மாணவர்) கனெக்ட் என்பது, ஸ்ரீலங்கா ரெலிகொம் கல்வியமைச்சுடன் இணைந்து வழங்கும் ஒரு புரட்சிகரமான பெறுமதிசேர் சேவையாகும். இச்சேவையானது, உங்கள் பிள்ளைகள் வீட்டிலிருந்து வெளியில், பாடசாலையில் இருக்கும்போது பெற்றோர் அவர்களுடன் தொடர்புகொள்ள வகைசெய்கிறது. இச்சேவையானது, உங்கள் பிள்ளைகள் பாதுகாப்பாக இருக்கிறார்கள், ஒரு தொலைபேசி அழைப்பு தூரத்தில்தான் அவர்கள் இருக்கிறார்கள் என்ற நிம்மதியை உங்களுக்களிக்கிறது.
ஸ்ரீலரெ சிசு கனெக்ட் என்பது, சிறுவர்கள் எந்த இடத்திலுமிருந்து, எந்த நேரத்திலும் தமது பெற்றோருடன் தொடர்புகொள்ளக்கூடிய (வெளிச்செல்லும் அழைப்பு வசதி) ஒரு பாதுகாப்பான குரல்வழி வசதியாகும். இந்த வசதிமூலம், சிறுவர்கள், பாடசாலையிலிருந்தோ அல்லது வெளியிலிருந்தோ எந்தவொரு ஸ்ரீலரெ தொலைபேசியிலிருந்தும் ஏற்கனவே முன்மொழியப்பட்ட நான்கு தொலைபேசி எண்களை டயல் செய்து, வெளிச்செல்லும் அழைப்புகளை மேற்கொள்ளலாம். இதனால் அவர்களுக்கு சில்லறைக்காசுகளோ அல்லது அழைப்பு அட்டைகளோ தேவையில்லை.