ஸ்ரீலரெ இல் நாம் நிலையன மற்றும் செல்லின இயக்குனர்கள், இணையச்சேவை வழங்குனர்கள், தொடர்பாடல் சேவைகள் மீள்விற்பனையாளர்கள், வெளிப்புற நுழைவாயில் இயக்குனர்கள், தரவு தொடர்பாடல் சேவை வழங்குனர்கள் மற்றும் மெய் நிகர் சேவை வழங்குனர்களுக்கு பலவிதமான மொத்தவிற்பனைச் சேவைகளை வழங்குகிறோம்.
ஸ்ரீலங்காவில் முன்னணி மொத்தவிற்பனைச் சேவை வழங்குனர் என்ற வகையில் வாடிக்கையாளரின் மனநிறைவை உறுதிப்படுத்த நாம் தரம் மற்றும் நம்பிக்கைத்தன்மையை எப்போதும் பேணுகின்றோம். நாம் தொடர்ந்தும் கணிணி முகில் சேவைகள் மற்றும் மெய்நிகர் சேவை வழங்கல் உள்ளிட்ட, நவீன மொத்தவிற்பனை உற்பத்திப்பொருட்களையும் சேவைகளையும் இணைத்து எமது உற்பத்திப்பட்டியலை விரிவாக்கிவருகிறோம்.
முன்னணி தேசிய ஆதார வலையமைப்புச் சேவை வழங்குனர் என்ற வகையில் ஸ்ரீலரெ, நாடளாவிய அளவில் முழுமையான இழைய வலையமைப்பினை அமைத்து, சேவை வழங்குனர்களின் உள்நாட்டு இணைத்தேவைகளைப் பூர்த்தி செய்கிறோம்.
முழுமையான அல்லது பகுதியான நிர்வாகப்படுத்திய சேவைகள் என்ற வகையில் நாம் இச்சேவையை வழங்குகின்றோம். பாரம்பரிய மற்றும் அடுத்த தலைமுறை IP ஐ அடிப்படையாகக்கொண்ட சேவையான இது, அதி சாதகமான சூழலில் எமது வாடிக்கையாளர் தமது இலாபங்களை அதிகப்படுத்த வகைசெய்கிறது.
எமது உள்நாட்டு இணையப்போக்குவரத்து தீர்வுகள் மூலமாக, ஸ்ரீலரெவின் அதி நவீன ஆதார வலையமைப்பில், அதிக நம்பிக்கைத்தன்மை மற்றும் சேவை பரவலாக்கிடைக்கும் தன்மையை உறுதி செய்து, இருவேறு இடங்களுக்கிடையேயான இணைப்புகையை வழங்குகிறோம். எமது இணையப்போக்குவரத்து பின்வரும் தொழில்நுட்பங்களை அடிப்படையாகக்கொண்டது:
T1 இயக்குனர்களுடன் இணைந்து, ஸ்ரீலரெ தனது நம்பிக்கையானதும் அதிவேகமானதுமான தொலைத்தொடர்பு உட்கட்டுமானம் மூலம் சர்வதேச இணைப்புகைக்கான உலகத்தரமான இணையப்போக்குவரத்து தீர்வுகளை கிட்டத்தட்ட எல்லா சர்வதேச நாடுகளுக்கும் வழங்குகிறது.
எமது சர்வதேச இணையப்போக்குவரத்து தீர்வுகள் பின்வருவனவற்றை உள்ளடக்கும்:
நாம் பலவகையான மொத்தவிற்பனைச் சேவைகளை வழங்குகிறோம்.
வழங்கப்படும் சேவைகள்
எமது முழுமையான தரவு நிலையமானது, தனது சிறப்பான உற்பத்திப்பொருள் பட்டியல் மூலமாக முக்கியமான தரவு மற்றும் செயலிகளை வழங்குகிறது.
எமது இணைய தரவு நிலையாமானது பின்வருவனவற்றை உள்ளடக்கியது:
நாம் தற்போது உங்கள் முறைமைகளையும் சேவை கிடைக்கும்தன்மை போன்றவற்றை விரிவாக்குவதற்காகப் பலவகையான வசதிகளை வழங்குவதால் நீங்கள் உட்கட்டுமான வசதிகளில் முதலீடுகளை மேற்கொள்ளத்தேவையில்லை.
நாம் இவற்றை வழங்குகிறோம்
ஒரேயொரு தேசிய ஆதார வலையமைப்பு சேவை வழங்குனரென்ற வகையில் ஸ்ரீலரெ, உள்நாட்டு இணையப்போக்குவரத்து தேவைகளை நிறைவேற்றுவதற்காக, நாடெங்கிலும் முழுமையாகப் பாதுகாக்கப்பட்ட இழைய வலையமைப்பினை அமைத்துள்ளது. தற்சமயம், எமது NBN ஆனது, நாடு முழுவதுமுல்ள 168 தேர்தல் தொகுதிகளில் 100% உள்ளடக்கி, அடுத்த 5 வருடங்களில் சகல பிரதேச சபைக்காரியாலயங்களிலும் NBN இணைப்புகையை ஏற்படுத்துவதற்குத் திட்டமிட்டுள்ளது.
ஸ்ரீலங்கா ரெலிகொம்மின் ஆதார வலையமைப்பானது (SLBN), பழைய ஆதார மேடைகளை இல்லாமல் செய்து, அவற்றை பராமரிக்கும் செலவுகளைக் குறைத்து, வினைத்திறனை மேம்படுத்தி, சேவை வழங்கலை துரிதப்படுத்தி, வேகத்தையும் செயற்பாட்டினையும் அதிகரித்து உள் நாட்டு இயக்குனர்களுக்குச் சிறப்பான சேவைகளை நடைமுறைப்படுத்துகிறது.
SLT as the NBN இயக்குனர் என்ற வகையில் ஸ்ரீலரெ, வலையமைப்பினைக் கட்டியமைத்து, தொழிற்படுத்தி, தனது மொத்தவிற்பனை சேவைகளை உள்நாட்டு இயக்குனர்கள் தமது வாடிக்கையாளர்களுக்கு விற்பனை சேவைகளை வழங்குவதற்காக திறந்த பெறுவழியை வழங்குகின்றது.
நாம் NBN இல் பல வகையான இணையப்போக்குவரத்து சேவைகளை வழங்குகிறோம்.