Site Map

தனிப்பட்டவை

தனிப்பட்டவை

all you want

Download Broadband CPE configuration guides

ADSL Router configuration guide ( videos)

வாடிக்கையாளர் இடங்களிலுள்ள ADSL உபகரணங்களில் நிரந்தரமான தளநிரல்களைப் (firmware) புதுப்பித்தல்

ஸ்ரீலரெ அகலப்பட்டை (ADSL) என்பது என்ன?

அகலப்பட்டை (அல்லது Broadband) என்பது, இணையத்தை இணைக்கும் ஒரு முறையாகும். அகலப்பட்டை (அல்லது Broadband) என அழைக்கப்படும் இது, முன்னர் பொதுவாக Narrowband என அழைக்கப்பட்ட பழைய இணைப்புகளுடன் ஒப்பிடும்போது, ஒரு அதிவேக இணைய இணைப்பாகும்.

ADSL என்பது, செப்புக்கம்பியுடனான தொலைபேசி வலையமைப்பினைப் பயன்படுத்தும் ஒரு அகலப்பட்டை இணைப்புத் தொழில்நுட்பமாகும். ADSL ஆனது, ஒரு தொலைபேசி இணைப்பில் பலவகையான அலைவரிசைகளைப் பயன்படுத்தி, உங்கள் சாதாரணமான 56k மொடெம் வழங்கும் வேகத்தைவிட அதிவேகமான செயற்பாட்டை வழங்கும். (10 இலிருந்து 140 மடங்குகள் வேகமானது). நீங்கள் இணையத்தையும் தொலைபேசியையும் ஒரே நேரத்தில் பயன்படுத்தலாம்.

ஸ்ரீலரெ அகலப்பட்டை ஏற்றுக்கொள்ளத்தக்க விலையில் அதிவேக, தடையற்ற இணையத்தை வழங்குகிறது.

அகலப்பட்டை வேகத்தைப் பாதிக்கக்கூடிய காரணிகள் யாவை?

பின்வரும் காரணிகளைப் பொறுத்து, நீங்கள் அனுபவத்தில் பெறும் வேகத்தின் உண்மையான தன்மைகள் குறிப்பிடத்தக்க அளவில் மாறக்கூடும்:

  • உங்கள் சேவையில் இயக்கப்படுவது 'Line Profile' ஆகும். இணைப்பின் ஸ்திரத்தன்மையைப் பேணுவதற்காக, ஸ்ரீலரெ அகலப்பட்டைச் சேவைகளை உச்ச தரவிறக்க வேகங்களைக் கட்டுப்படுத்தும் பழைமையான ஆரம்ப பொதியின் தன்மைக்குள் வைத்துள்ளது. அதற்குப்பின்னர் ஸ்ரீலரெயின் தொழிற்பாடுகள் மற்றும் பராமரிப்புக் குழுவானது, தனிப்பட்ட பாவனையாளர்களின் சூழ்நிலைக்கேற்ற இணைப்பு ஸ்திரத்தன்மைக்கும் வேகத்திற்கும் இடையிலான சாதகபாதகங்களை ஆராய்ந்து, வாடிக்கையாளர்களின் பின்னூட்டங்களின் அடிப்படையில் உகந்த வேகத்திற்கு மாற்றும்.
  • ஸ்ரீலரெ பரிவர்த்தனையிலிருந்து உங்கள் வதிவிடத்திற்கான செப்புக்கம்பியின் நீளம்.
  • ஒரே கேபிளின் செப்புச்சோடி இணைப்பிலிருந்து பிற வாடிக்கையாளர் பாவிக்கும் பிற மின்னணுவியல் சேவைகளின் தன்மை மற்றும் அவற்றின் எண்ணிக்கைகள்.
  • உங்கள் இடத்துக்கும் பரிவர்த்தனைக்கும் இடையிலான செப்பு வயரின் இணைப்புத்தரமும் அமைவடிவாக்கமும்.
  • வெளிப்புற மூலங்களிலிருந்தான மின்சாரத் தடங்கல்கள் (மின்சார மோட்டர்கள்).
  • உங்கள் வதிவிட செப்புக்கம்பியிடலின் அமைவடிவாக்கம்
  • உங்கள் கணிணியின் மென்பொருள் அமைவடிவாக்கமும் செயல்நிரலும் (குறிப்பாக, அது எவ்விதம் மேலிணைப்பை பரிவர்த்தனையில் பயன்படுத்துகிறது)
  • உங்கள் ADSL மொடெம் அல்லது ரௌட்டரின் செயலாற்றல்கள்.
  • நீங்கள் அணுகும் கணிணியின் கொள்ளளவு, சுமையேற்றம், சேருமிடத்திற்கான தரவுப் பெறுவழி வீதம்.

    எனவே, மேற்சொன்ன காரணிகள், கணக்கீட்டு மதிப்பிலிருந்து உங்கள் இணையவேகத்தைக் குறைக்கும் என்பது உண்மை. விளம்பரப்படுத்தப்பட்ட அலைவரிசை அளவை அறிந்துகொள்வதற்குப் பின்வரும் சார்விதிகள் பயனுள்ளதாக இருக்கக்கூடும்.

    • Bandwidth (அலைவரிசை அளவு)

    அனுப்பும் தரவுகளின் உச்ச எண்ணிக்கையைத் தீர்மானிக்கும் எந்தவொரு அகலப்பட்டை இணைப்பினதும் கொள்ளளவே அலைவரிசை அளவு ஆகும்.

    சில சமயங்களில் பல தொழில்நுட்ப காரணங்களால் பொதிகளில் விளம்பரப்படுத்தப்பட்டது போல சந்தாதாரர்கள் உச்ச அலைவரிசை அளவினைப் பெறுவது கடினம். அப்படியான சூழ்நிலையில் ஒரு தொழில்நுட்ப மதிப்பீடு செய்தபின், வாடிக்கையாளர்களுக்கு முடிந்தவரையில் உச்ச அலைவரிசை அளவு வழங்கப்படும். ஆனபோதிலும், உச்ச அலைவரிசை அளவானது, ‘குறைந்த அலைவரிசை அளவு’ என குறிப்பிடப்படும், அனுமதிக்கப்பட்ட குறைந்தளவு அலைவரிசையை விட அதிகமானால், அந்தக்குறிப்பிட்ட பொதியானது வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படமாட்டாது. அதற்குப்பதிலாக, வாடிக்கையாளரின் இணைப்பின் தன்மைக்கு ஏதுவான இன்னொரு பொருத்தமான பொதி வழங்கப்படும்.

    • Maximum & Minimum Bandwidth Parameters (உச்ச, குறைந்த அலைவரிசை அளவு சார்விதிகள்)

ரௌட்டர்/மொடம் மற்றும் தொலைபேசியை இணைத்தல்

ஒரு ரௌட்டரின் அடிப்படை அம்சங்கள்

சரிபார்ப்பு பட்டியல்

  • ஸ்ரீலரெ அகலப்பட்டை இணைப்பினை பொருத்துவதற்கு முன்னர், உங்களிடம் ஸ்ரீலரெ தொடர்புகொண்டுள்ளதா என்பதையும் உங்களுக்கான கணக்கு ஏற்படுத்தப்பட்டுள்ளது என்பதையும் உறுதிப்படுத்திக்கொள்ளுங்கள்.
  • அடுத்து தேவையானவை எல்லாம் உங்களிடம் தயாராகவுள்ளன என்பதையும் உறுதிசெய்யுங்கள். பின்வருவனவற்றுள் பெரும்பாலானவற்றுடன் ஒரு ADSL2+ modem/router வழங்கப்படும்:
    • ADSL2+ modem/router
    • Power adapter (for routers)
    • USB Cable (for modems)/Ethernet cable (for routers)
    • Installation CD (for modems)
    • POTS Splitter
    • Micro-Filters (for all parallel telephones/fax machines)
    • Sufficient length of twin-pair telephone cables (with RJ-11 connectors)
    • SLT Broadband Username and Password (இதை நீங்கள் பதிவுசெய்யும்போது கிடைக்கும் பொதியில் பார்க்கலாம்)
  • நீங்கள் பாவிப்பது மொடம் ஆகவிருந்தால், முதலில் அதை உங்கள் கணிணியில் நிறுவவேண்டும். ரௌட்டர் எனில் இது தேவையில்லை.
    • ADSL2+ modem ஐ நிறுவுதல்.
      உற்பத்தியாளரின் அறிவுறுத்தல் கையேட்டினைப் பின்பற்றி, அதன்படி, மொடெம் ஐ நிறுவவேண்டும்.
      சில மொடெல்களில், மொடெம் ட்ரைவர் முதலில் கணிணியில் நிறுவப்படுதல் வேண்டும். அதன்பின்னர்தான் மொடெம் இணைக்கப்படவேண்டும். எனவே முதல்தடவையாக மொடெம் இணைக்கப்படும்போது மொடெம் ட்ரைவர் முறையாக நிறுவப்பட்டுள்ளதா என உறுதிப்படுத்திக்கொள்ளவேண்டும்
      அதன்பின்னர் மொடெம் மென்பொருளை Desktop short cut மூலமாகவோ programs menu மூலமாகவோ அணுகலாம்.
    • ADSL2+ மொடெம்/ரௌட்டர் ஐ பொருத்துதல்:
      1. தொலைபேசி கேபிளை சுவரிலுள்ள சொக்கட்டிலிருந்து அகற்றுக.
      2. தொலைபேசி கேபிளை பயன்படுத்தி ஸ்பிளிட்டரின் LINE port இனை சொக்கட்டில் இணைக்கவும்.(சில மொடெல்களில் கேபிள் ஸ்பிலிட்டருடன் பொருத்தப்படும்).
      3. ஸ்பிலிட்டரின் PHONE/TEL port ஐ தொலைபேசி/தொலைநகல் இயந்திரத்துடன் இணைக்க. இப்போது தொலைபேசி இணைப்பு இயங்குகிறதா என்று பார்க்கவும்.
      4. போதுமான நீளமுள்ள ஒரு தொலைபேசி கேபிளைப் பயன்படுத்தி ஸ்பிலிட்டரின் ADSL/MODEM/DSL port ஐ மொடெம்/ரௌட்டரின் LINE port உடன் இணைக்கவும்.
      5. சுவரிலுள்ள சொக்கட்டுக்கு முன் எந்தவித சமாந்தரமான தொலைபேசி/தொலைநகல் இணைப்புகள் இருப்பது உசிதமல்ல. ஆனபோதிலும், தவிர்க்கமுடியாத சந்தர்ப்பங்களில், ஒவ்வொரு சமாந்தர இணைப்பும் Micro-Filter ஒரு உடன் பொருத்தப்பட்டிருக்கவேண்டும்.
        (முக்கியம்: உங்களிடம் பியோ டிவி சேவை இல்லாமலிருந்தாலே இந்த அமைப்பு செல்லுபடியாகும். நீங்கள் ஒரு பியோ டிவி பாவனையாளராகவிருந்தால் இதை அமைப்பதற்கு பியோ டிவி கையேட்டினைப் பார்க்க).
        உங்களிடம் இருப்பது ரௌட்டர் எனில், இல.10 ஐப் பார்க்க.
      6. USB data கேபிளை மொடம் இலுள்ள USB port இல் பொருத்துங்கள். உங்கள் கணிணியில் modem drivers நிறுவப்பட்டுள்ளதை உறுதிப்படுத்திக்கொள்க.
      7. உங்கள் கணிணியை இயக்கி, USB cable இன் மறுமுனையை ஒரு பாவனையிலில்லாத USB port இல் இணையுங்கள். இப்போது மொடெம் இன் LED மின்னும். நீங்கள் மொடெம் ஐ தூசியற்ற, வெளிச்சமான, அசையாமலிருக்கும் ஒரு இடத்தில் வைக்கவும்.
      8. ஸ்ரீலரெ உங்கள் அகலப்பட்டை கணக்கினை அமைத்து, நீங்களும் உங்கள் உபகரணத்தை சரியாக இணைத்துவிட்டீர்களானால், மொடெம் இலுள்ள ADSL indicator ஆனது மின்ன ஆரம்பித்து, ஒன்றிரண்டு நிமிடங்களில் நிலையாக எரியத்தொடங்கும்.
      9. ADSL indicator எரியாவிடில் அல்லது தொடர்ந்தும் மின்னிக்கொண்டிருந்தால், மீண்டும் படிமுறை 1 இலிருந்து 8 வரை முதலிலிருந்து செய்யுங்கள். அதன்பின்னும் ADSL indicator எரியாவிடில் எமது 1212 உதவி இலக்கத்தை அழையுங்கள்.

        ரௌட்டரை அமைத்தல்

      10. ரௌட்டருக்கு மின் இணைப்பினை ஏற்படுத்தியதும், ஒரே நேரத்தில் அதன் எல்லா indicator களும் எரிந்து, பின்னர் மெதுவாக மின்சார இணைப்பினைக் குறிக்கும் indicator மட்டும் நிலையாக எரிந்துகொண்டிருக்கும்.
      11. Ethernet cable மூலம் கணிணியின் Ethernet port இனை LAN port 1 இனுள் பொருத்துங்கள். இப்போது ரௌட்டரின் port 1 மின்னத்தொடங்கும்.
      12. ஸ்ரீலரெ உங்கள் அகலப்பட்டை கணக்கினை அமைத்து, நீங்களும் உங்கள் உபகரணத்தை சரியாக இணைத்துவிட்டீர்களானால், ரௌட்டரிலுள்ள ADSL indicator ஆனது மின்ன ஆரம்பித்து, ஒன்றிரண்டு நிமிடங்களில் நிலையாக எரியத்தொடங்கும்.
      13. ADSL indicator எரியாவிடில் அல்லது தொடர்ந்தும் மின்னிக்கொண்டிருந்தால், மீண்டும் படிமுறை 1 இலிருந்து 8 வரை முதலிலிருந்து செய்யுங்கள். அதன்பின்னும் ADSL indicator எரியாவிடில் எமது 1212 உதவி இலக்கத்தை அழையுங்கள். நீங்கள் ரௌட்டரை பயன்படுத்தினால், இல. 16 இற்குச் செல்லுங்கள்.
        If you are using a router, jump to the step no 16
      14. உங்கள் கணிணியின் மொடெம் மென்பொருள் அமைவடிவாக்கத்திற்குச் செல்லுங்கள்.
      15. உங்கள் பாவனையாளை பெயரை இடுக.
      • உங்கள் ADSL2+ ரௌட்டரை அமைவடிவாக்கம் செய்யத்தொடங்குங்கள்.
      1. 1.16. உங்கள் இணைய பக்கத்தில் http://192.168.1.1 என்று டைப் செய்து, ரௌட்டர் அமைவடிவாக்கத்திற்குச் செல்லுங்கள்.

        17. ரௌட்டர் பாவனையாளை கையேட்டினைப் பார்த்து, பாவனையாளர் பெயர் மற்றும் கடவுச்சொல்லைப் பெறுங்கள். (உ.ம்: பாவனையாளர் பெயர்: Admin கடவுச்சொல்: Admin. இதில் நீங்கள் உங்கள் ஸ்ரீலரெ அகலப்பட்டை பாவனையாளர் பெயர் மற்றும் கடவுச்சொல்லைப் பாவிக்கக்கூடாது.

        18. ரௌட்டர் அமைப்பு பக்கங்களில் பின்வரும் அடிப்படை சார்விதிகளைப் பொருத்தமான இடங்களில் இடுக:

        Parameter

        Value

        Routing Type

        PPPoE

        Virtual Path Identifier(VPI)

        8

        Virtual Circuit Identifier(VCI)

        35

        Multiplexing Method

        LLC/SNAP

        Authentication Protocol

        PAP


        19. பொருத்தமான இடத்தில் ஸ்ரீலரெயினால் கொடுக்கப்பட்ட ஏ.டி.எஸ்,எல் பாவனையாளர் பெயர் மற்றும் கடவுச்சொல்லை இடுக. (உ.ம்: username = kgXXXXXXX@sltbb)

        20. இதுவரை செய்த அமைப்புக்களை Save பண்ணி, இணைப்பு நிறுவப்படும்வரை காத்திருங்கள். (இப்போது ADSL இன் குமிழ்விளக்கு மின்னி, இணையத்தின் குமிழ்விளக்கும் மின்ன ஆரம்பிக்கும்.)

        21. ADSL இணைப்பு நிறுவப்பட்டதும் அந்த இணைப்பின் தன்மையை அதன் சுருக்க விளக்கத்தில் பார்க்கலாம் அல்லது பொருத்தமான பக்கத்தில் ADSL தன்மையைப் பார்க்கலாம்.

        22. மேற்சொன்ன அமைப்புகள் எல்லாம் நிறைவடைந்ததும், உங்கள் கணிணி, இணைய பெறுவழிக்குத் தயாராகும். ஏதாவதொரு இணையதள முகவரியை டைப் செய்து (உ.ம்: www.slt.lk) இணையம் இயங்குகிறதா என்று பாருங்கள். இயங்காவிடின், பின்வரும் படிமுறைகளைப் பின்பற்றுங்கள்:
      • இணைய உலாவி அமைப்புகளை (Browser Settings) பரிசோதியுங்கள்
      23. இணைய பக்கம் ஏற்றப்படாவிடில், இணைய உலாவியை (browser) ஐ refresh செய்யுங்கள் அல்லது reload செய்யுங்கள். பின்னர் பின்வருவனவற்றைச் செய்துபாருங்கள்:

      • இணைய உலாவியின் நினைவகத்தை நீக்குங்கள்
      ‘Internet Explorer’ இல் Tools ->Internet Options ->Generalஇற்கு செல்லுங்கள்

      • இணைய உலாவி ‘work offline’ நிலையில் உள்ளதா என்று பாருங்கள்.
      (Internet Explorer’ இல் File -> Work Offline என்பது தெரிவுசெய்யப்பட்டுள்ளதா என்று பார்க்க. ‘ஆம்’ என்று இருந்தால் அதை அகற்றுக.)

      • இணைய உலாவி அமைப்புகளை (Browser Settings) சரிபாருங்கள்.
      (Internet Explorer’ இல் Tools ->Internet Options ->Connections இற்குச் சென்று No Proxy ஐ தெரிவு செய்க)
      • எனது ஸ்ரீலரெ அகலப்பட்டை இணைப்பு நன்றாக இயங்காவிடில் நான் என்ன செய்யவேண்டும்?
      விண்டோஸ் இயங்குதள Command prompt இல் ipconfig/all ஐ டைப் செய்து, உங்களுக்கு ஐ.பி முகவரி இருக்கிறதா என்று பாருங்கள்.

      25. உங்கள் கணிணி இணையதள பெயர்களை இனங்கண்டுகொள்கிறதா என்று பார்ப்பதற்காக nslookup www.slt.lk என்று command prompt இல் டைப் செய்யுங்கள். பதில் கிடைத்தால் DNS இல் இயங்குகிறது என்று கொள்ளலாம்.

      26. ஒரு ஐ.பி முகவரியை பெற்றதும் command prompt இல் www.slt.lk ஐ டைப் செய்து, இணையம் இயங்குகிறதா என்று பார்க்கவும். பதில் கிடைத்தால் உங்கள் கணிணியில் இணையத்தைப் பயன்படுத்தலாம். உங்கள் இணைய உலாவியில் தான் பிழையுள்ளது.

      27. உங்கள் ஐ.பி முகவரியில் அல்லது DNS இல் பிரச்சனை என்றால், உங்கள் ரௌட்டருக்கான தொலைபேசி இணைப்பை பரிசோதிக்க. அல்லது 1212 என்ற இலக்கத்துக்கு அழையுங்கள்.

      28. பிரச்சனை இன்னும் தொடர்ந்தால் :

      • இணைப்புகளை சரிபாருங்கள்
      • மறுபடியும் ஏ.டி.எஸ்.எல் மொடம்/ரௌட்டர் அமைப்புகளைச் சரிபார்க்க
      •நீங்கள் உங்கள் பாவனையாளர் பெயர் மற்றும் கடவுச்சொல்லை சரியாக டைப் செய்திருக்கிறீர்களா என்று பார்த்தபின் மறுபடியும் முயற்சி செய்க. (பாவனையாளர்/கடவுச்சொல் பெயர் தவறாக இடப்பட்டிருந்தால் ரௌட்டர் புதிதாக இடப்பட்ட பாவனையாளர்/கடவுச்சொல்லை இனங்காண்பதற்கு நேரம் எடுக்கலாம். எனவே பொறுமையாக காத்திருங்கள்.

      29. பிரச்சனை இன்னும் தொடர்ந்தால் 1212 ஐ அழைத்து, பழுதைப் பதிவுசெய்யுங்கள்.

 

எனது ஸ்ரீலரெ அகலப்பட்டை இணைப்பின் வேகம் குறைந்தால் நான் என்ன செய்யவேண்டும்?

உங்கள் பொதியின் வேகத்தை முதலில் சரிபார்த்து, பின்னர் நீங்கள் உங்கள் பாவனை மட்டத்தை மீறிவிட்டீர்களா என்று பாருங்கள். அவ்வாறாயின் நீங்கள் உங்கள் வழமையான வேகத்தைப் பெறுவதற்கு அடுத்த மாதம் வரையில் காத்திருக்கவேண்டும், இல்லையெனில், 1212 ஐ அழைத்து, உங்கள் பாவனை மட்டத்தை 1 GB வரையில் அதிகரிக்குமாறு கேட்கலாம்.

எனது ஸ்ரீலரெ அகலப்பட்டை இணைப்பு தொடர்ந்து தடைப்படுவதற்கு நான் என்ன செய்யலாம்?

உங்கள் PSTN இணைப்பில் ஏதாவது சத்தம் அல்லது இடையூறுகள் இருக்கிறதா என்று பாருங்கள். அப்படி இருந்தால்:

  • நீங்கள் சமாந்தரமான தொலைபேசி இணைப்புகளைப் பயன்படுத்தினால் அவற்றைத் தற்காலிகமாக அகற்றிவிடுங்கள்.
  • தொலைபேசிக்கம்பியை ஸ்பிலிட்டர் இல்லாமல் நேரடியாக ரௌட்டரில் பொருத்தி சரிபாருங்கள். இப்போது இணைப்பு சரியென்றால் பிரச்சனை உங்கள் ஸ்பிலிட்டரில் தான். நீங்கள் ஸ்பிலிட்டரை மாற்றவேண்டும்.

பிரச்சனை மேலும் தொடர்ந்தால், 1212 ஐ அழைத்து உங்கள் இணைப்பிலுள்ள கோளாறை பதிவுசெய்யுங்கள்.

Scroll To Top