Light
Dark
Pay your bill

கூட்டாண்மைப்பொறுப்பு

all you want

கூட்டாண்மைப்பொறுப்பு

தேசிய தொலைத்தொடர்பாடல் தீர்வுகள் வழங்குனர் என்ற வகையில், ஸ்ரீலங்கா ரெலிகொம்மின் கூட்டாண்மைப்பொறுப்பானது, அதன் வணிகத்திட்டத்தின் உள்ளார்ந்த அங்கமாகவும் கூட்டாண்மைக்கான அடையாளமாகவுமுள்ளது. நாட்டுக்காக 160 வருடங்களுக்கு மேலாகச் சேவைபுரிந்துவரும் ஸ்ரீலங்கா ரெலிகொம் ஒரு உயர்மட்ட பொறுப்புணர்வுள்ள கம்பனியாக மக்களாலும் தொழில் நிறுவன்ங்களாலும் இனங்காணப்பட்டுள்ளது. எமது பெறுமதிமிக்க வாடிக்கையாளர்களின் வாழ்க்கையில் நாம் முக்கியமான அங்கமாகவிருந்து அவர்களின் எதிர்காலத்தை வடிவமைக்கும் அதேநேரம், எமது வணிகமும் அதன் தொழிற்பாடுகளும் நம்பிக்கைத்தன்மை, தெளிவு, போன்ற அம்சங்களைக்கொண்ட எமது உயர் நிலைப்பாட்டைக் காப்பாற்றுவதற்ககாக நாம் தொடர்ந்தும் உழைப்போம்.

இந்த கருத்தம்சத்தினுள், பல வழிகளில் எமது வாடிக்கையாளர் மற்றும் பங்குதாரர்களின் வாழ்க்கைத்தரத்தையும் வேலையையும் மேம்படுத்துவதற்கு ஆவலாயுள்ளோம். எமது மைய வணிகச் செயற்பாடுகளைத்தாண்டி, ஒவ்வொருவருக்கும் ஏற்கப்படத்தக்க செலவிலான சேவைகளை வழங்குவதுடன், சமூக, சுற்றுப்புறச்சூழல் சார்ந்த முயற்சிகளையும் எடுத்துவருகிறோம். மேலும், ஒரு நாட்டின் முன்னேற்றத்துக்கு தொழில்நுட்பம் முக்கிய பங்கினை வகிப்பதால், எதிர்காலத்தை நோக்கிய ஒரு அணுகுமுறையுடன், இலங்கையின் எல்லாப்பாகங்களிலும் டிஜிட்டல் ஒருங்கிணைப்பை ஊக்கப்படுத்தி, தேசிய பொருளாதார வளர்ச்சிக்கும் அபிவிருத்திக்கும் உதவுகிறோம்.

மக்கள் தமது நண்பர்கள் உறவினர்களுக்குப் பரிந்துரை செய்யக்கூடிய அளவில், இலங்கையின் மிகவும் விரும்பப்படும் தொலைத்தொடர்பு வர்த்தக சின்னமாக நாம் இருக்கவேண்டுமென்று எதிர்பார்க்கிறோம். இதை மனதில்கொண்டு, நாம் தொடர்ந்தும் எமது பங்குதாரர்களுடன் நல்லுறவுகளைப்பேணி, தரம், நம்பிக்கைத்தன்மை மற்றும் பொறுப்புணர்வினை எமது வர்த்தகசின்னம் பிரதிபலித்து, நாம் இத்துறையில் நீண்டகாலம் நிலைத்து நிற்கவேண்டுமென்பதற்காகப் பாடுபடுகின்றோம்.