ஸ்ரீ லங்கா இன்சூரன்ஸ் கோர்பரேஷன் நிறுவனத்துடன் இணைந்து ஸ்ரீலரெ வழங்கும் 'டெலி லைப்' காப்புறுதியானது, ஸ்ரீலரெ வாடிக்கையாளர்களுக்கு கட்டுப்படியாகக்கூடிய தவணை கட்டணங்களுடன் வாணாள் காப்புறுதியை வழங்குகிறது. இச்சேவையின் பெரும் நன்மைகளில் ஒன்று இதன் கட்டுப்படியாகக்கூடிய தவணை கட்டணங்களும் அது சம்பந்தமான வசதிக்களுமாகும். அதாவது, தவணை கட்டணங்கள் வாடிக்கையாளரின் மாதாந்த தொலைபேசி கட்டணங்களிலிருந்து கழிக்கப்படும். அதை ஒவ்வொரு மாதமும் ஸ்ரீலரெ தொலைபேசி கட்டணங்களுடன் செலுத்தலாம்.
யார் தகுதியுடையவர்கள் சகல மெகாலைன் மற்றும் சிட்டிலிங் பின்கட்டண வதிவிட வாடிக்கையாளர்கள் 18 - 69 வயதுக்குள் உள்ள ஸ்ரீலரெ வாடிக்கையாளர்கள் பாவனையிலுள்ள மெகாலைன் அல்லது சிட்டிலிங் பின்கட்டண இணைப்பின் சட்டரீதியான உரிமையாளர். கட்டணங்கள் மாதாந்த தவணை கட்டணம் மாதாந்த தொலைபேசி கட்டணத்துடன் சேர்த்து அறவிடப்படும். ஆரம்பத்தில் 1 வருடத்திற்கான காப்பீடு, பின்னர் மீளாய்வு செய்யப்படும் காப்புறுதி வைத்திருப்பவர் காப்பீட்டை தொடரவேண்டுமெனில் ஒவ்வொரு மாதமும் தவணை கட்டணத்தை செலுத்தவேண்டும். டெலிலைஃப் காப்புறுதி திட்டங்கள் டெலிலைஃப் பேசிக் 1’ - பழைய காப்பீடாகும். புதிய காப்பீட்டு திட்டத்தில் விபத்து மரண காப்பீடு ரூ. 200,000. 00 இக்கு அதிகரிக்கப்படும். சந்தாதாரர் ஆவது எப்படி வாடிக்கையாளர் அவசர அழைப்பு இலக்கம் 1212 ஐ அழைத்து டெலிலைஃப் இன்சூரன்ஸ்’ திட்டத்தில் சேருங்கள் வாடிக்கையாளர் முதல் தவணைக்கான கட்டணத்தை செலுத்தும் நாளே அவர் சந்தாதாரராக சேர்த்துக்கொள்ளப்படும் நாளாகும். முதலாவது தவணை கட்டணம் கிடைத்த ஒரு மாதத்திற்குள், வாடிக்கையாளரின் உறுதி செய்யப்பட்ட காப்புறுதி சான்றிதழ் ‘ ஸ்ரீலங்கா இன்சூரன்ஸ் கோர்பொரேஷன்’ இனால் அனுப்பிவைக்கப்படும். பணக்கோரிக்கைகள் வாடிக்கையாளர் தனது வாணாள் காப்புறுதி கோரல் பற்றிய எந்தவிதமான விடயங்களையும் ஸ்ரீலரெ வுடன் நேரடியாக தொடர்புகொண்டு கேட்குமாறு ஸ்ரீலங்கா இன்சூரன்ஸ் கோர்பொரேஷன் அறிவுறுத்தியுள்ளது. அதன்படி ஸ்ரீலரெ, வாடிக்கையாளரினால் கோரப்பட்ட எந்தவொரு காப்புறுதி பண கொடுப்பனவுகள் பற்றிய தொடர்புகளை ஏற்படுத்திக்கொள்ளும். சகல பணக்கோரல்களும் ஸ்ரீலரெ உடன் ஆலோசித்தபின்னர் வழங்கப்படும். வாடிக்கையாளர் நோயினால் மரணமடைந்திருக்கும் பட்சத்தில், முதலாவது காப்புறுதி கட்டணம் செலுத்தப்பட்ட நாளிலிருந்து 60 நாட்களின் பின்னரான பணக்கோரல்களே கொடுப்பனவுக்காக கவனத்தில் கொள்ளப்படும் . சகல பணக்கோரிக்கைகளும் மரணம் அல்லது விபத்து காரணமாக நிரந்தரமான, மொத்த உடல் ஊனம் ஏற்பட்ட 3 மாதங்களுக்குள் விண்ணப்பிக்கப்படவேண்டும். ஏற்கனவே இருந்த நோய்களுக்கான பணக்கோரிக்கைகள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டா. (உதாரணமாக, வாணாள் காப்புறுதி விண்ணப்பிக்க முன்னரே இருந்த நோய்கள்). சகல பணக்கோரல்களையும் தீர்த்துவைக்கும்போது, காப்புறுதி சான்றிதழில் உள்ள நியதிகள் மற்றும் நிபந்தனைகள் பொருந்தும். நியதிகளும் நிபந்தனைகளும் தொடர்ந்து 3 மாதங்களுக்கு கட்டணம் செலுத்தாதிருக்கும் பட்சத்தில் காப்புறுதி ஒப்பந்தம் நீக்கப்பட்டுவிடும். வாடிக்கையாளர் அவசர அழைப்பான1212 இல் தொடர்பு கொள்வதன்மூலம் எந்த நேரத்திலும் இந்த ஒப்பந்தத்தை நீக்கலாம். வாடிக்கையாளர் 'நல்ல உடல் நலம் ' பற்றிய உறுதிமொழி படிவத்தில் கையொப்பமிட்டு, ஸ்ரீலரெ இடம் சமர்ப்பித்தல் வேண்டும்.