Light
Dark
Pay your bill

கூட்டாண்மைப்பொறுப்பு – சுற்றுப்புறச்சூழல்

all you want

எமது தினசரி வணிகத்தொழிற்பாடுகளில் சிறப்பான சுற்றுப்புறச்சூழல் பயிற்சிகள் பின்பற்றப்படவேண்டுமென்பதில் ஸ்ரீலங்கா ரெலிகொம் உறுதியாகவுள்ளது. இதன்மூலம் சுற்றுப்புறச்சூழலிலும் சம்பந்தப்பட்டவர்கள் மீதுமான எதிர்மறையான தாக்கம் குறையும் அல்லது இல்லாமல் போகும். இந்த சுற்றுப்புறச்சூழல் பயிற்சிகளாவன: மீள்சுழற்சிப்படுத்தல், பசுமைப்புரட்சி, கம்பனிக்கொள்கைகளைப் பின்பற்றுதல், இடத்தைப்பயன்படுத்தல் பற்றியதிலான செயல்முறைகள், எந்தப்பொருளையும் வீணாக்குவதைக்குறைத்தல், உற்பத்தித்திறனை அதிகரித்தல். மேலும், ஐ-ஸ்ரீலங்கா, அடுத்த தலைமுறை வலையமைப்பு போன்ற தொழில்நுட்ப மாற்றச் செயற்றிட்டங்கள் மூலமாக நாம் ஒட்டுமொத்தமாக சக்தி மற்றும் இட சேமிப்பு முறைகளைக்கடைப்பிடிக்கிறோம்.

எமது உற்பத்திகள், உலகெங்கிலுமுள்ளவர்கள் தினமும் தமது அன்புக்குரியவர்களுடன் இணைந்திருக்கச் செய்து, பிரயாணம் செய்வதைக்குறைப்பதால், சுற்றுப்புறச்சூழ்லில் காபன் படிவுகள் ஏற்படும் அபாயம் தடுக்கப்படுகிறது. இதை அளவிடமுடியாதபோதும், சுற்றுப்புறச்சூழலுக்கான எமது பங்களிப்பாகவேயுள்ளது. எமது நிறுவனமானது தொழில்நுட்பங்களை வழங்குவதால் காபன் படிவுகளை வெளிவிடுவது தவிர்க்கமுடியாதெனினும், அதை முடிந்தவரையில் நாம் குறைப்பதற்கு முயல்கிறோம்.

குறந்த நுகர்வு மற்றும் கழிவை நிர்வகித்தல் மூலமாக குறிப்பிடத்தக்க நன்மைகளைப்பெறலாம் என்பது எமது வணிக அணுகுமுறையாகும். இந்தவகையில் நிலைத்துநிற்கும்தன்மை பற்றியதன் கருத்தம்சங்களை மனதில் ஆழப்பதியவைத்து, கம்பனியின் வணிகச்செயல் நோக்கங்களில் அங்கமாக, முக்கியமான பிரச்சனைகளை இனங்கண்டு, கண்காணித்து, நிர்வகிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவேண்டும். எமது ஊழியர்கள்; கள ஊழியர்களுக்கு மரங்களை வெட்டுவதைக்குறைப்பது உட்பட்ட, சூழல் மாசுபடும் காரணிகளை குறைப்பது, கேபிள் இடுதல் போன்ற அவர்களில் தினசரி கடமைகளை சூழலுக்கு மாசு ஏற்படாவண்ணம் கொண்டு நடத்தல் என்பவை பற்றிய விழிப்புணர்வுகளை ஏற்படுத்தல் மூலம் இந்த முயற்சிகளில் ஈடுபட்டிருக்கிறார்கள்.

சக்தி முகாமைத்துவம்

சக்தி முகாமைத்துவத்திற்கான நுண்ணுணர்வு அணுகுமுறையைத் தழுவி, ஸ்ரீலரெ, அதன் எல்லா மட்டங்களிலுமான தொழிற்பாடுகளில் வினைத்திறனுடனான சக்தி தொழில்நுட்பங்களை எப்போதும் ஊக்குவித்துவருகின்றது. அதன்படி, எமது தொழிற்பாட்டின் ஒவ்வொரு அம்சத்திலும் பொருத்தமான சக்தி சேமிப்பு பற்றிய கொள்கை வரையறுக்கப்பட்டுள்ளது. மேலும், ஸ்ரீலரெ இந்த சக்தி முகாமைத்துவ முறைகளைப் பயிற்சிகள், மதிப்பீடுகள், மூலமாகவும் உரிய நேரத்தில் ஏற்படுத்தப்படும் கொள்கைகள் மற்றும் வணிகத்தின் மாறிவரும் தேவைகளை நிறைவேற்றும் பயிற்சிகள் மூலமாகவும் மேம்படுத்த திட்டமிட்டுள்ளது.

சக்தி முகாமைத்துவத்துக்கான சிறந்த பயிற்சிகளை ஏற்படுத்தல்

சக்திக்கான செலவுகளைக்குறைத்தலுக்கு ஸ்ரீலரெ முன்னுரிமையளித்துள்ளது. இதில் தொழிற்பாட்டுச் செலவுகளைக்குறைப்பது மாத்திரமன்றி சூழலில் அது ஏற்படுத்தும் தாக்கத்தையுணர்ந்து நீண்டகாலத்துக்கேற்ற வகையில் நிலையானதொரு வணிகமாதிரியை அமைத்தல். இந்த குறிக்கோள்களை அடைவதற்காக, 2013 இல் ஸ்ரீலரெ ஒரு புத்திசாலித்தனமான செயலை மேற்கொண்டது. அது, கம்பனியின் நீண்டகால சக்தி முகாமைத்துவத்தைப் பேணக்கூடிய நிலையானதொரு பயிற்சிமுறையைக் கட்டியெழுப்புதல். கம்பனியின் சக்தி சம்பந்தப்பட்ட எல்லா நடவடிக்கைகளையும் மேற்பார்வை செய்வதற்கான சக்தி முகாமைத்துவக்குழு நியமிக்கப்பட்டது. இது ஸ்ரீலரெ ஊழியர்கள் மத்தியில் சக்தி சேமிப்பு பற்றித் தொடர்ச்சியாக அறிவுறுத்துகிறது. இந்தப்புதிய சக்தி சேமிப்புக்குழுவினால் பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன. சக்தி முகாமைத்துவத்தினால் மேற்கொள்ளப்பட்டுவரும் முக்கியமான முயற்சிகளில் ஒன்று ‘சக்தி சேமிப்பு வாரம்’ ஆகும்.