Submitted by isuru on திங், 01/10/2022 - 09:56 மைஅஸ்ரோ சோதிட சேவை தற்போது பத்திரிகைகள், ரிவி, வானொலிகளில் பரவலாக கிடைக்கக்கூடிய பாரம்பரிய ‘நட்சத்திர’ சோதிட சேவைகளைப்போலல்லாது, வேறுபட்ட வகையில் உங்கள் வாழ்க்கையைப் பற்றிய மிகச்சரியானதும் நம்பக்கூடியதுமான ஆரூடங்களை ‘MyAstro’ சேவை வழங்குகிறது. யார் தகுதியுள்ளவர்கள்? இச்சேவையானது சகல சிட்டிலிங்க் வாடிக்கையாளர்களுக்கும் குறுஞ்செய்தி வழியாக கிடைக்கக்கூடியதாகவிருக்கிறது. சந்தாதாரர்கள் விருப்பப்படி தமது ஆரூடங்களை ‘சிங்கிலிஷ்’ அல்லது ஆங்கிலத்தில் பெறலாம். வழங்கப்படும் சேவைகள் சிறப்பு அறிவிப்புகள் உங்கள் வாழ்க்கையில் கிரகங்களின் மாற்றங்களை அறிந்துகொள்ளுங்கள். சோதிட வாசிப்புகள் உங்கள் நாள் அல்லது கிழமை எவ்விதம் அமையும் என்பதை அறிந்துகொள்ளுங்கள் ஆரூடங்கள் பொருளாதாரம், கல்வி, வேலை, திருமணம், காதல்/உறவுகள், உடல் நலம், குடும்பம் மற்றும் நல்ல/கெட்ட நேரங்கள் போன்ற 8 பிரதான வகைகளை அடிப்படையாக கொண்டிருக்கும். தினசரி ஆரூடங்களின்போது அதிர்ஷ்ட எண்கள் மற்றும் நிறங்களும் தெரிவிக்கப்படும். எண்சோதிடம் உங்கள் பண்பியல் தொகுப்புகளைப்பெற்று, உண்மையான நீங்கள் யாரென்பதை அறிந்துகொள்ளுங்கள். இது எண்களை ஆராய்ந்து, அவற்றின் தன்மைகளைப் பிரதிபலித்தலாகும். ஒவ்வொரு எழுத்துக்கும் ஒவ்வொரு இலக்கப்பெறுமதி உண்டு. பிறந்த திகதியிலுள்ள எண்களின் கூட்டுத்தொகையும் பெயரிலுள்ள எழுத்துக்களுக்குரிய எண்களின் கூட்டுத்தொகையும் ஒருவரின் தன்மை, ஆளுமை, வாழ்க்கை, அவர்களை ஊக்கப்படுத்தும் அம்சங்கள், திறமைகள் போன்றவற்றை வெளிப்படுத்தும். பஞ்சாங்கம் புராதன வேதசாஸ்திரத்தை அடிப்படையாகக்கொண்டு சுப நேரங்கள் பார்க்கப்படுகின்றன. பஞ்சாங்கத்தில் ராகு காலம், சுப நேரம், சுப முஹூர்த்தம் போன்றவை குறிப்பிடப்படும். பொதிகள் பொதி வழங்கும் சேவைகள் அறிவிக்கப்படும் கால அளவு மாதந்த கட்டணம்(ரூ) MyAstro சோதிட சேவை சிறப்பு அறிவிப்புகள் தினசரியும், அவ்வப்போதும் 30.00 Suba பஞ்சாங்க சேவை தினசரி 20.00 Nume எண்சோதிட சேவை 02 messages per week 20.00 மூன்று ‘MyAstro’ பொதிகளில் நீங்கள் விரும்பினால் ஒன்றுக்கு மேற்பட்ட சேவைகளை தெரிவுசெய்யலாம். ஆனால். வாடிக்கையாளர் முதலில் MyAstro ’ வை பதிவுசெய்த பின்னரே எண்சோதிட சேவையில் (Nume) சந்தாதாரராக முடியும். இந்த விதி பஞ்சாங்க (Suba) சேவைக்கு பொருந்தாது. பெறுவழி மற்றும் பதிவுக்கட்டணம் – குறுஇலக்கம் 1211 விவரிப்பு பெறுவழியின் தன்மை கட்டணம் (ரூ.) பதிவு, பெறுவழி குறுஞ்செய்தி ஒரு செய்திக்கு 2 ரூபா ஆரம்ப செயல்முறைப்படுத்தல் ஊடாடு குரல்பதிவு (IVR)) ஒரு நிமிடத்திற்கு 5 ரூபா பதிவுசெய்தல் ஆரம்பத்தில் ஸ்ரீலரெ சிடிலிங்க் தொலைபேசியிலிருந்து 1211 என்ற இலக்கத்திற்கு டயல் செய்து, சோதிட சேவை பொதி/களுக்காக பதிவுசெய்துகொள்ளுங்கள். பாவனையாளர் கையேட்டிலுள்ளபடி, தெரிவு செய்த பொதியின் பெயர் மற்றும் உங்கள் பெயரை குறுஇலக்கம் 1211 க்கு ஒரு குறுஞ்செய்தி அனுப்புங்கள். நீங்கள் அச்சேவைக்கு தகுதியானவரெனில், உங்கள் பதிவு ஏற்றுக்கொள்ளப்பட்டு PIN உடனான ஒரு குறுஞ்செய்தி உங்களுக்கு அனுப்பப்படும். அறிவுறுத்தல்களை பின்பற்றி, பிறந்த நாள், பிறந்த நேரம், பிறந்த இடம் போன்ற தனிப்பட்ட தரவுகளை இடுங்கள்.. பின்னர், உங்கள் சேவைப் பதிவினை உறுதிப்படுத்தும் ஒரு குறுஞ்செய்தி உங்களுக்கு அனுப்பிவைக்கப்படும். சேவையிலுள்ள அம்சங்கள் ஆரூடங்கள் காலையில் உங்களுக்கு அனுப்பிவைக்கப்படும். ஆரூடங்களை ‘சிங்கிலிஷ்’ அல்லது ஆங்கிலத்தில் பெறலாம். ஒரு தொலைபேசியிலிருந்து எத்தனை வாடிக்கையாளர்களும் இச்சேவைக்காக பதிவு செய்துகொள்ளலாம். ஒவ்வொருவருக்கும் தனித்தனியான PIN கள் அவர்களது பெயர்களுக்கு அனுப்பிவைக்கப்படும். எனவே பாவனையாளைகள் ஒரு தொலைபேசியிலிருந்து ஒரே பெயரில் பதிவு செய்யவேண்டாம். சுப நேர எதிர்வுகூறல்கள் (உ.ம்: ராகு காலம்) எல்லோருக்கும் பொதுவானவை என்பதால், ஒரு பாவனையாளர் ‘Suba’ வை பதிவுசெய்தால், ‘MyAstro’ பாவனையாளர்கள் அனைவருமே அதே தொலைபேசியிலிருந்து ‘ Suba’ சேவையை பெறலாம். பின் கட்டண இணைப்பெனில், சிட்டிலிங்க் தொலைபேசி உரிமையாளரின் கட்டணப்பட்டியலில் இந்த மொத்த சேவைக்கான கட்டணங்களும் சேர்த்துக்கொள்ளப்படும். முன் கட்டண பாவனையாளர்களெனில், இது அவர்களின் முன் கட்டண கணக்கிலிருந்து கழிக்கப்படும். நியதிகளும் நிபந்தனைகளும் சேவை பதிவு மற்றும் எதிர்வுகூறல்களைப் பெறுதல். நீங்கள் புதிய PIN ஐப் பெறும்போது, நீங்கள் ஒரு பதிவுசெய்யப்பட்ட வாடிக்கையாளராக கருதப்படுவீர்கள். முன் கட்டண, பின் கட்டண வாடிக்கையாளருக்கான வாடகைகள் அவர்கள் தெரிவு செய்த பொதிகளுக்கமைவாக முறையே அறவிடப்படும்/கணக்கிலிருந்து கழிக்கப்படும். நீங்கள் இச்சேவையை இரவு 8 மணிக்கு முன்னதாக பதிவு செய்தால், அடுத்த நாள் காலையில் உங்கள் சோதிடங்களை/எதிர்வுகூறல்களைப் பெறுவீர்கள். சேவை நிறுத்தங்கள்/புதுப்பித்தல்கள் உங்கள் வேண்டுகோளுக்கமைய ஒவ்வொரு கட்டணப்பட்டியல் அனுப்பும் மாதமும் மேற்கொள்ளப்படும். மேற்சொல்லப்பட்ட கட்டணங்கள் யாவும் வரிகள் நீங்கலானவை. மேற்குறிப்பிடப்பட்ட கட்டணங்கள் யாவும் அரச வரிகள் நீங்கலானவை. சேவைகளை வாங்கும்போது அவற்றுக்குப்பொருத்தமான வரிகள் அறவிடப்படும். MyAstro 4G/LTE Fibre Megaline Select Section Telephone